தாமஸ் மலை ஒன்றியம் 5 வது வார்டில் 7 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 முனைப் போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கண்ணன், திமுக சார்பில் பன்னீர் செல்வம், தேமுதிக சார்பில் குமார், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சத்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கோதண்டபாணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி பரிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தாமஸ் மலை 5 வது வார்டில், திமுக, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது.