திருப்போரூர் அருகே உடலில் காயங்களோடு இளைஞர் சடலம், கொலையா போலீஸ் விசாரணை
திருப்போரூர் அருகே உடலில் காயங்களோடு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள ஆமூர் பகுதி அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி ரவி, இவருக்கு அஜித் குமார் என்ற 24 வயது மகன் உள்ளார்.
இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் அஜித்குமாரின் செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளதால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் திருப்போரூர் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், இன்று காலை ஆமூர் ஏரி மதகு வழியே அப்பகுதி மக்கள் சென்ற போது, அங்கே இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற திருப்போரூர் காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர் அப்போது ஆமூர் பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்பது தெரியவந்தது உடலில் ரத்த காயங்களுடன் அஜித்குமார் இறந்து கிடந்ததால் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.