மகளிர் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் : அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு மகளிர் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மகளிர் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினரின் பொதுக்குழு கூட்டம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை சுற்றியுள்ள விடுதிகளில் தங்கி பணிபுரியும் ஆடவர் மற்றும் மகளிர் தங்கும் விடுதி உரிமையாளர்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தாங்கள் நடத்தி வரும் விடுதிகளில் மிகவும் குறைந்த வாடகையில் சுவையான உணவு, சுகாதாரம், காற்றோட்டம் போன்ற அனைத்து வசதிகளும் செய்துள்ளோம். மேலும் மகளிர் பாதுகாப்புக்காக பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இதர வசதிகளையும் செய்துள்ளோம்.
2014 ஆம் ஆண்டு சிறார்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் அப்போதைய ஆட்சியாளர்கள் சிறார் மற்றும் மகளிர் தங்கும் விடுதிகள் என்று குறிப்பிட்டதால் அதை கடைபிடிப்பது என்பது கடினமாகும் சிறார்களுக்கு மட்டும் இச்சட்டம் ஏற்றதாகும்.
ஆதலால் அச்சட்டத்தில் உள்ள மகளிர் என்ற வார்த்தையை நீக்கி திருத்தம் செய்தால் மகளிர்களுக்காக தங்கும் விடுதிகள் நடத்தி வரும் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை அரசுக்கு இதன் மூலம் கோரிக்கையாக வைக்கிறோம் என்று சங்க தலைவர் சீதாராமன் தெரிவித்தார்.