இருளர் மக்களுக்கு நிவாரண பொருள் வழங்கிய நீதிபதி ஃபேனிராஜன்.

திருக்கழுக்குன்றம் ஒன்றிய நடுவக்கரை ஊராட்சியில், இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்களை நீதிபதி ஃபேனிராஜன் வழங்கினார்.

Update: 2021-11-26 04:45 GMT

செங்கை மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் மீனாட்சி மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஃபேனிராஜன், நிவாரணப் பொருட்களை வழங்கினர். 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம்,  நடுவக்கரை ஊராட்சியில்,  இருளர் பகுதியில் வசிக்கும் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு,  அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, பாய்; அதேபோ, ஓலை குடிசையில் வடிக்கும் குடும்பத்திற்கு வீட்டின் மேல் போடுவதற்கு தார்பாய் உள்ளிட்ட பொருட்களை,  செங்கை மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் மீனாட்சி மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஃபேனிராஜன் (திருக்கழுக்குன்றம் பொறுப்பு) ஆகியோர் வழங்கினர்,

இதில், திருக்கழுக்குன்றம் டி எஸ் ஓ ஜீவீதா, ஆர்ஐ நிர்மலா, மற்றும் வழக்கறிஞர்கள் போவாஸ், வினோதினி, வித்தியா, செல்லமுத்து, இலவச சட்டப்பணிகள் குழு உதவியாளர் முத்து மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் நித்தியானந்தம், துணைத் தலைவர் மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ஹமீத் பாஷா, ரேயின்போ'ஸ் நிறுவனர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News