திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடைபெற்றது.;
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா இன்று நடைபெற்றது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையை கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து இன்று மாலை அகண்ட தீபம் ஏற்றுவதற்காக திருக்கழுக்குன்றம் முழுவதும் எண்ணெய் சேகரிக்கப்பட்டது. பின்னர் 6 மணிக்கு வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அப்போது மலைக்கோவிலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் தீபத்தை தரிசனம் செய்தனர்.
மேலும், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள், மலைக்கோவிலில் அகண்டத்தில் ஏற்றபட்ட தீபத்தை தரிசித்து, அதன் பின்பு அவரவர் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், ஈஸ்வரர், அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். இந்த விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.