தாழம்பூர் திரிசக்தி ஆலயத்தில் மாசி மாத 10 நாட்களுக்காக பிரம்மோத்ஸவப் பெரு விழா
தாழம்பூர் திரிசக்தி ஆலயத்தில் மாசி மாத பிரம்மோத்ஸவப் பெரு விழா ஆலய உபாசகர் கிருஷ்ணகுட்டி தலைமையில் கொடியேற்றம்;
மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா இன்று கோமாதா பூஜையின் மீன லக்கனத்தில் சந்நதி எதிரே உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பலவகையான வாசனைத் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ லக்ஷ்மி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ மூகாம்பிகை ஸ்ரீ பால விநாயகர் பாலமுருகன் ஸ்ரீ ஐயப்பன் ஆகியோர்களுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு கொடிமரத்திற்கு முன்பு காட்சியளிக்க வைத்தார்கள் பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பக்தர்களின் திரிசக்தி அம்மன் போற்றி என முழக்கங்கள் எழுப்பினர். பிரம்மோற்சவ விழா ஆலய அறங்காவலர் கே. கே. கிருஷ்ணகுட்டி தலைமையில் கொடியேற்றம் மிக விமரிசையாக தொடங்கப்பட்டு கொடிமரத்திற்கு மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.