திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் தொடங்கியது
திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவ விழா, இன்று காலை, 4:30 - 6:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா என்று கோஷங்களை எழுப்பினர்,
இன்றிலிருந்து, தினமும் காலை, இரவு வேளைகளில், சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளும் உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாடவீதிகளில் வீதியுலா வருவார்.
தொடர்ந்து, 12 நாட்கள் நடக்கும் உற்சவத்தில், முக்கிய நிகழ்வான தேரோட்டம், வருகின்ற 13ம் தேதியும், அதை தொடர்ந்து தெப்போற்சவம், 16ம் தேதியும் நடைபெற உள்ளது
பின், 19ம் தேதி காலை நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்துடன், பிரம்மோற்சவ விழா நிறைவுபெறும்