திருப்போரூர் ஒன்றியம் 7 வது வார்டில் 5 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப்போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வாசுதேவன், திமுக சார்பில் குணா, நாம் தமிழர் கட்சி யாசின் செரீப், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அருண்குமார், சுயேட்சை வேட்பாளர் தேவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருப்போரூர் 7வது வார்டில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கடசி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது