திருப்போரூர் ஒன்றியம் 4 வது வார்டில் 7 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 முனைப்போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் தினேஷ்குமார், திமுக சார்பில் குமார், நாம் தமிழர் கட்சி நூர் நிஷா, மக்கள் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரவி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முருகன், சுயேட்சை வேட்பாளர்களாக வெங்கடேசன், ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருப்போரூர் 4வது வார்டில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.