திருப்போரூர் ஒன்றியம் 19 வது வார்டில் 7 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 முனைப்போட்டி நிலவுகிறது

Update: 2021-10-03 18:26 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் தனசேகரன்.

.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 19வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ஜோதிமணி கோதண்டவேலு, திமுக சார்பில் தனசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரபு, சுயேட்சை வேட்பாளராக ஸ்ரீநாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருப்போரூர் 19வது வார்டில், , திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

Similar News