திருப்போரூர் ஒன்றியம் 18 வது வார்டில் 4 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 18 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.

Update: 2021-10-03 18:15 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சொக்கலிங்கம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 18வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சிவசங்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சொக்கலிங்கம், பாட்டாளி மக்கள் கட்சி தீனதயாளன், சுயேட்சை வேட்பாளராக ஏழுமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருப்போரூர் 18வது வார்டில், , விசிக, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

Similar News