திருப்போரூர் ஒன்றியம் 14 வது வார்டில் 6 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப்போட்டி நிலவுகிறது.

Update: 2021-10-03 17:35 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பொன்னரசன்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சம்பத், காங்கிரஸ் கட்சி சார்பில் பொன்னரசன், தேமுதிக கட்சி சார்பில் டில்லி பாஸ்கர், நாம் தமிழர் கட்சி வேல் முருகன், பாட்டாளி மக்கள் கட்சி ஏகாம்பரம், சுயேட்சை வேட்பாளராக தேசிங்கு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருப்போரூர் 14வது வார்டில், காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

Similar News