திருப்போரூர் ஒன்றியம் 12 வது வார்டில் 6 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப்போட்டி நிலவுகிறது.

Update: 2021-10-03 17:16 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கோட்டி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் திவ்யா, திமுக சார்பில் தனக்கோட்டி, நாம் தமிழர் கட்சி தீபா, பாட்டாளி மக்கள் கட்சி பார்கவி, சுயேட்சை வேட்பாளர்களாக பிரிஸ்டியாள்,மகேஷ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருப்போரூர் 12வது வார்டில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

Similar News