திருப்போரூர் ஒன்றியம் 10 வது வார்டில் 4 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் தனலெட்சுமி, திமுக சார்பில் சீதா லெட்சுமி, சுயேட்சை வேட்பாளர்களாக சௌமியா, தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருப்போரூர் 10வது வார்டில், திமுக, அதிமுக, ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.