திருப்போரூர்: மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 200 பேர் இணைந்தனர்

திருப்போரூரில் மாற்று கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2021-12-13 07:00 GMT

திருப்போரூரில் மாற்று கட்சயினர் இரு நூறு பேர் அதிமுகவில் இணைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்மார் ஊராட்சி போலச்சேரியில் உள்ள திமுக,தேமுதிக,இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட மாற்று கட்சியினர் பொன்மார் ஊராட்சி அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் துளசிங்கம் ஏற்பாட்டில்,

200 க்கும் மேற்பட்டோர் பிறகட்சியில் இருந்து  விலகி மாநில மகளிர் அணி இணை செயலாளரும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினருமான கே.மரகதம் குமரவேல், திருப்போரூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ்.குமரவேல் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Tags:    

Similar News