திருக்கழுகுன்றம்: தடுப்பூசி முகாம்-திருப்போரூர் எம்.எல்.ஏ. துவக்கினார்
திருக்கழுகுன்றம் அனுபுரத்தில் தடுப்பு ஊசி முகாமை திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி துவக்கி வைத்தார்.
கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைத்து 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடும் பணியை அரசு அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெய்க்குப்பி ஊராட்சி அனுபுரம் பொது மக்களுக்கான இலவச தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளரும், திருப்போரூர் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.பாலாஜி முகாமினை துவக்கிவைத்து பொதுமக்களிடையே அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றும் தனி மனித இடைவெளியை பின்பற்றி அரசு கூறும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
இவருடன் திருக்கழுக்குன்றம் வட்டார மருத்துவர் கவிதா, திமுகவை சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஒன்றிய அவை தலைவர் நல்லூர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கரியச்சேரி சேகர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருக்கழுக்குன்றம் கிழக்கு வட்டார தலைவர் நெய்குப்பி எம் ஏழுமலை, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பட்டிக்காடு பாபுநாயக்கர், விசிகட்சியின் பொறுப்பாளர், இ சி ஆர் அன்பு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் வேலுபிரபாகரன், பொறுப்பாளர்கள் வேதஎழில்மலை, மணமை சண்முகசுந்தரம் சமூக ஆர்வலர் சாய் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
முதற்கட்டமாக நெய்க்குப்பி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் ஷில்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.