திருக்கழுக்குன்றம் சங்கரபுரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருக்கழுக்குன்றம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீ சங்கரபுரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

Update: 2021-09-01 07:15 GMT

சங்கரபுரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய சாலூர் கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீ சங்கரபுரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது, கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன், துவங்கிய பூஜைகள், கிராம தேவதைகள் என அனைத்து விதமான பரிகார பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை காலை மற்றும் மாலை வேலைகளில் யாக பூஜைகளுடன் கோ பூஜை, சங்கல்பம் ஹோமம் நடைபெற்று இன்று காலை மங்கள வாத்தியத்துடன், சிவ வாத்தியம் முழங்க யாக சாலையில் இருந்து புனித நீர் உள்ள கலசத்தை தரணிதர சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக சாலையில் இருந்து புறப்பட்டு கோபுர விமானம் மற்றும் மூலவ சாமிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News