மழை நீரில் அடித்து வரப்பட்ட பிறந்து சில மணி நேரமேயான குழந்தையின் உடல்

திருப்போரூா் சிப்காட் குடியிருப்பு மழைநீா் கால்வாய் வெள்ளத்தில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர்.

Update: 2021-11-25 04:45 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் அருகே ஆலத்தூா் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது.அதன் அருகே சிப்காட்டில் பணியாற்றும் ஊழியா்கள் குடியிருப்பு இருக்கிறது.இந்த பகுதியில் உள்ள மழைநீா் வடிகாலில் இன்று காலையில் மழைநீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.அதில் பிறந்த குழந்தையின் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்து வந்ததை பாா்த்து,அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

உடனடியாக திருப்போரூா் போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.போலீசாா் விரைந்து வந்து தண்ணீரில் மிதந்த குழந்தை உடலை எடுத்து ஆய்வு செய்தனா்.அது ஆண் குழந்தை உடல்.பிறந்து ஒரிசில மணி நேரமே இருக்கலாம் என்று தெரிகிறது.குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்தது.இதையடுத்து போலீசாா் குழந்தை உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அதோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

இந்த சிப்காட் தொழிற்பேட்டை குடியிருப்பில் வட மாநில தொழிலாளா்கள் பலா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.எனவே இந்த பிறந்த குழந்தையை சில மணி நேரத்தில் மழைநீா் கால்வாயில் வீசி கொலை செய்யப்பட்டதா? அல்லது இறந்த குழந்தையின் உடல் தண்ணீரில் வீசப்பட்டதா?என்று போலீசாா் விசாரணை நடத்துகின்றனா்.அதோடு சிப்காட் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News