திருக்கழுக்குன்றம்:மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம்
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கான மாருத்துவ சான்று வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி தலைமையில் திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் சிவசங்கரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இம்முகாமில் 4 மருத்துவர்கள் அடங்கிய குழு பயனாளிகளின் உடல்நல குறைபாடுகளை பொறுத்து சதவிகித அடிப்படையில் தகுதி உடையவர்களுக்கு புதிய அடையாள அட்டை பெறுவதற்கு மற்றும் ஏற்கனவே பெற்ற புத்தக வடிவிலான அடையாள அட்டையை ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இம்முகாமில் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.