திருக்கழுக்குன்றத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தி மௌன ஊர்வலம்

திருக்கழுக்குன்றத்தில் விமான விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் மௌன ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2021-12-10 10:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் விமான விபத்தில் மரணமடைந்த ராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பொதுமக்கள் சார்பில் விமான விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தி மௌன ஊர்வலம் நடைபெற்றது. நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் மோகன்ராஜ், பேரூராட்சி செயலாளர் தினேஷ், பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் துரை தனசேகர், மணிகண்டன், இந்து முன்னணி பொறுப்பாளர் ஆறுமுகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் என திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.திரு

Tags:    

Similar News