மழையால் பாதிக்கப்பட்ட 4,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மழையால் பாதிக்கப்பட்ட 4500 குடும்பத்திற்கு திருப்போரூர் ஒன்றியத் தலைவர் எல். இதயவர்மன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2021-12-07 11:45 GMT

பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் தாழம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில்- மழையால் பாதிக்கப்பட்ட ஊராட்சி மக்களுக்கு 4500 குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெெற்து.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.சேகர்,திருப்போரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர், முன்னாள் தாழம்பூர் ஊராட்சி மன்ற தலைவர், கிளைகழக செயலாளர் ஏ.கருணகரன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெய்கணேஷ், தாழம்பூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெ.லஷ்மி, தாழம்பூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News