வீடியோ காலில் கள்ளக்காதலியிடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமலீலை : டிஜிபி நடவடிக்கை
வீடியோ காலில் கள்ளக்காதலியுடன் காம லீலையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு டிஜிபி மாற்றம் செய்தார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி (வயது38) இவருக்கும் திருக்கழுக்குன்றம் அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு முஸ்லீம் மத சடங்குப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள அவரது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அன்சாரியின் மனைவி திருக்கழுக்குன்றம் அருகே நெல்வாய் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அஷ்ரப் அன்சாரி அவரது மனைவியின் செல்போனை பரிசோதித்தபோது அவர் வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அஷ்ரப் அன்சாரி அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கண்டித்துள்ளார்.
மேலும் செல்போனில் மற்றொரு புறம் பேசி வரும் நபர் குறித்தும் விசாரணை நடத்தி வந்துள்ளார். அந்த நபர் யார்? எதற்காக தனது மனைவியுடன் தொடர்பில் உள்ளார் என நோட்டுமிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அஷ்ரப் அன்சாரியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பது அஷ்ரப்அன்சாரிக்கு தெரியவந்தது.
தொடர்ந்து மனைவியின் செல்போனில் பதிவாகி இருந்த திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகரின் அந்தரங்க புகைப்படங்களை சேகரித்த கணவர் அஷ்ரப் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்தார்.
அதேபோல் ஆய்வாளர் முனிசேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வடக்கு மண்டல ஐ.ஜி, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல் துறை தலைவர்(டி.ஜி.பி) இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்ததின்பேரில் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆய்வாளர் முனிசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில், பாலி மாவட்டத்தில் பதுங்கி இருந்த வடமாநில ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க சென்னையில் இருந்து சென்ற சிறப்பு தனிப்படை போலீஸ் பிரிவில் இடம் பிடித்தவர். தனிப்படை கொள்ளையர்களை பிடிக்க சென்றது. பாலி மாவட்டத்தில் பதுங்கி இருந்த ஏ.டிஎம். கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட முயற்சித்து அந்த குண்டு தனிப்படையில் சென்ற மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டின் மீது பாய்ந்ததில் அவரது உடலில் குண்டு துளைத்து பெரிய பாண்டியன் இறந்தார்.
இதில் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். அப்போது இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூர் இன்ஸ்பெக்டராக இருந்த முனிசேகரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது.
கள்ளக்காதலியுடன் வீடியோகாலில் காமலீலையில் ஈடுபட்ட முனிசேகர் ராஜஸ்தான் துப்பாக்கீடு சூடு சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.