திருக்கழுகுன்றம் விசிக வேட்பாளரை ஆதரித்து திருப்போரூர் எம்எல்ஏ பிரசாரம்
திருக்கழுகுன்றம் பேரூராட்சி 15வது வார்டில் போட்டியிடும் விசிக வேட்பாளரை ஆதரித்து திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி வாக்கு சேகரித்தார்;
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தென்னை மரம் சின்னத்தில் செந்தில்குமாரை போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி 15வது வார்டுக்கு உட்பட்ட பரமசிவம் நகர் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதில் திருப்போரூர் தொகுதி செயலாளர் ஆநா பெருமாள்,ஒன்றிய செயலாளர்கள் திருமணி சதீஷ், செல்வகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.