கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமியில் உலக மருத்துவ முன்னோடிகள் சிலை திறப்பு
கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமியில் உலக மருத்துவ முன்னோடிகள் சிலை திறப்பு மற்றும் நவீன வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் உள்ள கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமியில் நடைபெற்ற உலக மருத்துவ முன்னோடிகள் சிலை திறப்பு மற்றும் நவீன வகுப்பறை கட்டிடம் திறப்பு விழாவில், ஊரக தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் விஜிபி சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிலைகளையும் கட்டடங்களையும் திறந்து வைத்தனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் உயிரிழந்த அனிதாவின் சகோதரி சௌந்தர்யா இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக ஆணையை மருத்துவக் கல்லூரியின் தலைவர் டேவிட் பிள்ளை வழங்கினார்.
ஏழை எளிய குடும்பத்தைச் மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்க குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பினையை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.