எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள்: கல்பாக்கத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.;

Update: 2022-01-17 07:15 GMT

எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருக்கழுகுன்றம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கல்பாக்கம் நகரில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பெண்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனபால் தலைமையில் சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News