நரப்பாக்கம் கிராமம் ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

திருக்கழுக்குன்றம் அடுத்த, நரப்பாக்கத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2021-08-20 21:00 GMT

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய கோபுர கலசத்திற்கு நடைபெற்ற பூஜை.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய நரப்பாக்கம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ நவக்கிரக ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை மகா ஹோமம், கர்த்தாசங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மகாகணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜைகளுடன் துவங்கி நேற்றைய தினம் மகா கணபதி பூஜை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று நேற்று மாலை மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று மங்கள வாத்தியத்துடன் காலை ௯.30 மணியிலிருந்து 10 மணி அளவில் யாக சாலையில் இருந்து கலச நீர் புறப்பட்டது.

இதில் ராமநாதன் குருக்களுடன் சிவாச்சாரியர்கள் உடனிருந்து கலசத்தில் இருந்த புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News