மாமல்லபுரம் அருகே ஆறுபடை வீடு சட்ட கல்லூரி துவக்கிவைப்பு

மாமல்லபுரம் அருகே, ஆறுபடை வீடு சட்ட கல்லூரியை, ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி துவக்கி வைத்தார்.

Update: 2021-11-25 01:00 GMT

மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள ஆறுபடை வீடு சட்டக்கல்லூரியை, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி பங்கேற்று துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரம் அடுத்த பையனூரில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை கழகத்தின் மற்றுமொரு கல்லூரியாக,  ஆறுபடைவீடு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்திய பார் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரியில், இந்தாண்டு முதல், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரி அரங்கில் நடைபெற்றது. டீன் முனைவர் வின்சன்ட் கோம்ராஜ் வரவேற்புரை வழங்க, பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் பி.கே. சுதிர் பங்கேற்று வகுப்புகளை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட,  சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கல்லூரியின் சட்ட ஆலோசகருமான நீதிபதி முனைவர். பி. ஜோதிமணி சிறப்புரையாற்றினார்.

நீதியரசர் முனைவர். ஜோதிமணி பேசுகையில்,  மாணவ, மாணவியர் சட்டப் படிப்பை சிறப்பாக படித்து பல்கலைக்கழகத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்து சேவைகள் செய்ய வேண்டும் என்றார். இவ்விழாவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், கல்லூரியின் ஆலோசனைக் குழு தலைவருமான முனைவர். பிரான்சிஸ் ஜூலியன் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு சட்டக்கல்லூரியின் பயன்களை எடுத்துரைத்தார். பேராசிரியர் சுதிர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News