மற்றொரு பகீர்! கேளம்பாக்கம் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்

கேளம்பாக்கம் தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.;

Update: 2021-06-02 03:41 GMT

கேளம்பாக்கம் தனியார் பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகார் குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அதிகாரிகள் விசாரித்தகாட்சி.

பமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் போக்சோ சட்டத்தில் கைதானார். அவரை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்து பல பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது, மாணவிகள் பாலியல் புகார் அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடெண்டல் பள்ளி மாணவிகளும் பாலியல் தொல்லை குறித்து புகாரை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் அதிகாரிகள், அப்பள்ளியில் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். பாலியல் தொல்லை குறித்து, scpctn1@gmail.com என்ற, இ - மெயில் முகவரியிலும், மாணவியர் புகார் அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை அடையாறில் உள்ள கேந்திரிய வித்யா பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளி நிர்வாகத்திடம் மாணவியர் புகார் அளித்துள்ளனர். இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News