திருப்போரூர் கந்தசாமி கோவிலில் உற்சவர் மண்டபம் அமைக்கும் பணி தீவிரம்
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ரூ.9.3 லட்சம் மதிப்பில் தேக்குமரத்தில் புதிய டிக்கட் கவுன்ட்டர், உற்சவர் மண்டபம் அமைக்கும் பணி தீவிரம்.;
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜூலை மாதம், கோவில் திருமண மண்டபம், சரவணப் பொய்கை குளம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரும்பு கூடாரத்தில் அமைக்கப்பட்ட டிக்கட் கவுண்டர், உற்சவர் மண்டபம் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது முற்றிலும் சேதமடைந்துள்ளதை கண்டு மாற்றியமைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, தேக்கு மரத்தாலான, புதியதாக 4.80 லட்சம் ரூபாய் மதிப்பில் டிக்கட் கவுண்டர், 4.50 லட்சம் மதிப்பில் உற்சவர் மண்டபம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் டிக்கட் கவுண்டர் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.