கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கல்

மானாம்பதி ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.;

Update: 2021-08-07 09:30 GMT

கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மானாம்பதி பேருந்து நிலையத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில், மானாம்பதி ஊராட்சி செயலாளர் எம்.என்.தில்லைவாணன், டி.தனபால் முன்னிலையில்,  நளினி குணசேகர் ஏற்பாட்டில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News