குடிபோதையில் மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது: போலீஸ் விசாரணை

மாமல்லபுரம் அருகே பையனூர் கிராமத்தில் குடிபோதையில் மனைவியை அடித்து கொன்றவர் கைது.;

Update: 2021-08-08 04:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூர் கிராமத்தில் வசிப்பவர் ரவிக்குமார் (38). இவர் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி ஆனந்தி வயது 33, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு சிறுவர்கள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் ரவிக்குமார் தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போடுவது வழக்கமாக கொண்டுள்ளார். அதே போல் நேற்றைய தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து உள்ளார். தினமும் குடித்துவிட்டு வருகிறாயே என மனைவி கண்டித்ததாக தெரிகிறது.

கோபமடைந்த ரவிக்குமார் உடற்பயிற்சி செய்யும் தம்பில்ஸ்-ஐ எடுத்து மனைவியை தலையிலேயே அடித்ததில் ஆனந்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகர் தலைமையில் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News