இந்திய கடல்வள மசோதாவை கண்டித்து மீனவ அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

இந்திய கடல்வள மசோதாவை கண்டித்து மீனவ அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கடற்கரையோரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-07-19 11:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் சின்னகுப்பத்தில் மத்திய அரசை கண்டித்து மீனவ அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கடற்கரையோரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் சின்னகுப்பத்தில் மத்திய அரசை கண்டித்து மீனவ அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கடற்கரையோரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்று துவங்கிய பாராளுமன்ற குளிர் கால கூட்ட தொடரில் இந்திய கடல்வள மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் இருப்பதாகவும் இந்த மசோதா நிறைவேறினால் மீனவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக மீனவ மக்கள் தெரிவித்தனர் 

தலைமுறை தலைமுறையாக எங்களின் முன்னோர்கள் வழியில் தொழில் செய்து வரும் நாங்கள் தற்போது இந்த மசோதா நிறைவேறினால் மீனவர்களாகிய எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்,

Tags:    

Similar News