மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய டால்பின்
மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய டால்பின் மீன் மீனவர்கள் மீட்டு ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.;
மாமல்லபுரம் அருகே உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு மீனவர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 6 அடி நீளமுள்ள டால்பின் மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது ,இதை கண்ட அப்பகுதி மீனவ இளைஞர்கள் அதை பிடித்து மீண்டும் கடலில் ஆழமான பகுதியில் விட முயன்றனர்.
ஆனால் அலையின் வேகம் அதிகரித்து இருந்ததால் மீனை உள்ளே எடுத்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.பலமுறை முயன்று கடலில் ஆழமான பகுதியில் விட்டனர்.