மேலக்கோட்டையூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-08 04:00 GMT
இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகதில் தலித் மாணவர்களுக்கு மட்டும் படிப்பதற்கு சீட்டுகள் வழங்குவதில்லை என அவர்களுக்கு ஒதுக்கிய இட ஒதிக்கீடு சீட்டை கல்லூரி குடும்பத்திலுள்ளவர்களை தங்களுக்கு உரியவர்களுக்கு வழங்குவதாகும் மாணவர்கள் குற்றச்சாற்றி வந்த நிலையில் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பாக கல்லூரி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலச் செயலாளர் தமிழ்பாரதி தலைமையில் நடைபெற்றது.

இதில் கல்லூரியை கண்டித்து உரிய இட ஒதுக்கீடு வழங்கி மாணவர்களின் நலன் காக்க வேண்டும் எனவும் அரசு கொண்டு வரும் சட்டங்களை பின்பற்ற வேண்டும் எனவும் தலித் மக்களை ஒதுக்காமல் உரிய இட ஒதுக்கீடு வழங்கி மேம்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர் கூறுகையில் இதுகுறித்து முதலமைச்சர் சிறப்பு தகவல் பிரிவு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News