திருக்கழுக்குன்றத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை

திருக்கழுக்குன்றத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது

Update: 2021-06-20 08:45 GMT

திருக்கழுக்குன்றத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது

திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கோவில் அர்ச்சகர்களுக்கு தமிழக அரசு அறிவித்திருந்த 4000 ரூபாய் உதவித் தொகையை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் மாதச் சம்பளம் ஏதுமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர திருக்கோயில் பணியாளர்கள் உட்பட 14,000 பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரம் கருதி, இந்து அறநிலையத்துறை சார்பில் உதவித்தொகை ரூ.4000/- மற்றும் 10 கிலோ அரிசி உட்பட 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திருக்கோயில்களில் மாதச் சம்பளம் ஏதுமின்றி பணியாற்றிவரும் 35 அர்ச்சகர்கள் மற்றும் இதர திருக்கோயில் பணியாளர்கள் 20 நபர்கள் உட்பட 55 பயனாளிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவித்தொகை ரூ.4000/- மற்றும் 10 கிலோ அரிசி உட்பட 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் கோவில் செயல் அலுவலர் ஆ.குமரன் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வீ.தமிழ்மணி, எஸ்ஆர்எல்.இதயவர்மன் முன்னிலையில்,  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி ஆகியோர் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Tags:    

Similar News