நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-11-04 09:21 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு அரசு சார்ந்த இலவச வீட்டு மனை பட்டா 81 நபர்களுக்கும், பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா( PMAY) திட்டத்தின் கீழ் 22 நபர்களுக்கு, வீடுகளும் . நரிக்குறவர் இன சான்றிதழ் 35 நபர்களுக்கும், இருளர் இன சான்றிதழ் 88 நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை 6 நபர்களுக்கு, நரிக்குறவர் நலவாரிய அட்டை 34 நபர்களுக்கும், பழங்குடியினர் நல வாரிய அட்டை 25 நபர்களுக்கும், வாக்காளர் அடையாள அட்டை 18 நபர்களுக்கும், குடும்ப அடையாள அட்டை 21 நபர்களுக்கும், சுய வேலைவாய்ப்பு மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி ஆணை 18 நபர்களுக்கும், கடன் உதவி தொகை 45 நபர்களுக்கும், கலைஞர் மேம்பாட்டு நகர்ப்புற மேம்பாட்டு திட்ட பணிக்கான சான்றிதழ் போன்றவற்றை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரடியாக மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ,மாவட்ட வருவாய் அலுவலர் சாஹிதா பர்வீன் காஞ்சிபுரம் மாவட்ட எம்.பி.செல்வம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி, ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் தி.மு.க. சார்ந்த கட்சி நிர்வாகிகள் அரசு உயர் அதிகாரிகள் நரிக்குறவர் மற்றும் இருளர் இன பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News