முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்: செல்லும் வழியில் மக்களிடம் குறை கேட்பு
கிழக்கு கடற்கரை சாலையில் பல மாதங்களுக்குப்பின்னர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி செய்த ஸ்டாலின், தான் சென்ற வழியில் பொதுமக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். சில மாதங்களாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடும் ஸ்டாலின் இன்றும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் ஸ்டாலினுக்கு உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. பயிற்சி, சைக்கிளிங் செல்லுதல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையும் ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு வாரம்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, சில மாதங்களாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்த ஸ்டாலின், ஊரடங்கு தளர்வுகள் அளித்தபிறகு, மீண்டும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று கோவளம் பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கில் பயிற்சியை மேற்கொண்டார். சைக்கிள் பயிற்சி செய்த ஸ்டாலின், வழியில் பொதுமக்களை சந்தித்துப்பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.