செங்கல்பட்டு திருப்போரூர்: தடை செய்யப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தடை செய்யப்பட்ட பகுதியை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, இந்தநிலையில் திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய கச்சேரி சந்து தெருவில் 7 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, தற்போது அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அங்குள்ள குடியிருப்புவாசிகள் வெளியேறவும், வெளியில் இருந்து வருபவர்கள் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து தருவதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் சுரேஷ் தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.
அவர்களுக்கு மருத்து தேவைகள், அத்தியாவசிய பொருட்கள் தேவைகள் செய்துதரப்படுகிறதா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, திருப்போரூர் தாசில்தார் ரஞ்சினி,பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், இளநிலை உதவியாளர் சித்ரா, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.