திருப்போரூர் அருகே 35 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!
திருப்போரூர் அருகே மானாமதியில் 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 35 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஏரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக மானாமதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது, தகவலின் பேரில் திருப்போரூர் ஆய்வாளர் கலைச்செல்வி, மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், மானாமதி உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஏரிக்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசாரை பார்த்ததும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேர் தப்பியோடினர். அதில் இருவரை பிடித்து விசாரணை செய்ததில், மானாமதியை சேர்ந்த சுதா (43), கமலக்கண்ணன் (33) என தெரிந்தது. அவர்களிடமிருந்த, 53 ஆயிரம் மதிப்புள்ள, 35 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
இருவரை கைது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சுதாவை புழல் சிறையிலும், கமலக்கண்ணனை செங்கல்பட்டு சிறையிலும் அடைத்தனர். மேலும் தலைமுறைவாக உள்ள ஏழுமலையை போலீசார் தேடி வருகின்றனர்.