நாட்டுப்புற பாடல்கள் பாடி கொரொனா விழிப்புணர்வு

விழிப்புணர்வு

Update: 2021-05-09 20:00 GMT

நாட்டுப்புறப்பாடல் மூலமாக நடத்தப்பட்ட கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருப்போரூர் பேரூராட்சி மற்றும் காவல் துறை சார்பில் நாட்டுப்புற பாடல்களின் மூலமாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்ற சூழலில், பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் விழிப்புடன் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்போரூர் காவல்நிலைய  ஆய்வாளர் கலைச்செல்வி. உதவி ஆய்வாளர் சந்திரசேகர், செயல் அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் ராமச்சந்திரன், அறிமா சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனாவின் தீவிரம், நோய் தடுப்பு நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து நாட்டுப்புற பாடல்களின் மூலமாக விளக்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், துாய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் முகக்கவசம் காவல்துறை சார்பில் வழங்கினர்.

Tags:    

Similar News