சிவசங்கர் பாபாவின் சொகுசு அறைகளில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை

சிவசங்கா் பாபாவின் கேளம்பாக்கம் பள்ளியில் சொகுசு அறைகளில் சிபிசிஐடி போலீஸ் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-08 07:30 GMT

சிவசங்கர் பாபாவின் பள்ளிக்கு செல்லும் சிபிசிஐடி போலீஸ் குழுவினர்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இண்டா் நேஷ்னல் பள்ளியில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து,பள்ளியின் முன்னாள் மாணவிகள், மாணவிகளின் பெற்றோா்கள் போலீசில் புகாா் செய்தனா்.இதையடுத்து சென்னை சிபிசிஐடி போலீசாா் வழக்குகள் பதிவு செய்து,பள்ளி நிா்வாகி சிவசங்கர் பாபாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

சிவசங்கா்பாபா மீது முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததில்,போக்சோ வழக்குகளும்,மாணவிகளின் பெற்றோருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பெண்களுக்கெதிரான வன்கொடுமை வழக்குகளும் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திலும்,செங்கல்பட்டு மகளீா் நீதிமன்றத்திலும் நடந்து வருகின்றன.இதில் முதல் போக்சோ வழக்கில் மட்டும் சிபிசிஐடி போலீசாா் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.மற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்ய சாட்சியங்கள், ஆதாரங்களை சேகரித்து வருகின்றனா்.

இதற்கிடையே சிவசங்கா்பாபாவுக்கு குற்றப்பத்திலிகை தாக்கல் செய்துள்ள முதல் போக்சோ வழக்கு தவிர மற்ற 4 வழக்குகளிலும் செங்கல்பட்டு போக்சோ,மகளீா் நீதிமன்றங்கள் ஜாமின்கள் வழங்கியுள்ளன.முதல் போக்சோ வழக்கில் ஜாமின் கிடைக்காததால்,சிவசங்கா்பாபா தொடா்ந்து சிறையில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் மற்ற 4 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆதாரங்கள்,தடயங்கள்,சாட்சிகளை சேகரிக்கும் முற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனா்.அதன்படி சுசில்ஹரி இண்டா் நேஷ்னல் பள்ளியில்,சிவசங்கா்பாபாவின் அலுவலகம் மற்றும் ரகசிய அறைகளை திறந்து பாா்த்து சோதனையிட சிபிசிஐடி போலீசாா் முடிவு செய்தன்.

அதன்படி இன்று காலை பெண் போலீஸ் அதிகாரிகள்,வீடியோ கேமரா மேன்கள் ஆகியோருடன் 10 க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசாா் 2 வாகனங்களில் கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளிக்கு வந்தனா்.கேளம்பாக்கம் போலீசாரும் பாதுகாப்பிற்கு வந்துள்ளனா்.

சிவசங்கா்பாபாவின் சொகுசு அறை,ரகசிய அறைகளை திறந்து பாா்த்து சோதனைகளில் ஈடுப்பட்டுள்ளனா். பாலியலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டடுள்ள சிவசங்கர்பாபா ஆபாச புகைப்படங்கள், ஆபாச வீடியோ காட்சிகள் உள்ளதா என்று சிபிசிஐடி போலீசார் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதோடு அந்த சோதனையை முழுமையாக வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News