மாமல்லபுரம் அருகே காா்கள் மோதல்: மத்திய அரசு அதிகாரி உட்பட 6 போ் காயம்

மாமல்லபுரம் அருகே 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் மத்திய அரசு அதிகாரி உட்பட 6 போ் காயமடைந்தனர்.;

Update: 2022-02-21 12:15 GMT

மணமை கூட்ரோடு அருகே 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மணமை பேருந்து நிலையம் அருகே அனுபுரம் பி.ஆர்.பி நகரிய குடியிருப்பில் வசிப்பவர் A.N.ஷர்மா. மத்திய அரசு அதிகாரியான இவர் பணி நிமித்தமாக மும்பை சென்றிருந்தாா். இன்று மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தாா். விமான நிலையத்திலிருந்து காரில் தனது குடும்பத்தினருடன் அனுப்புரம் திரும்பிக் கொண்டிருந்தாா்.

இன்று பகல் 2 மணியளவில் ECR சாலையில் மணமை கூட்டு ரோடு அருகே காா் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிரே பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த மற்றொரு கார் மணமை கூட்ரோடு அருகே ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் மத்திய அரசு அதிகாரியின் வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த மூவருக்கும், அதைப்போல் எதிர் காரில் வந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மற்ற வாகனங்களில் வந்தவா்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுப்பட்டனா்.காயமடைந்த 6 பேரும் அருகே உள்ள பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மேல்சிகிச்சைக்காக கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ECR சாலையில் இன்று மதியம் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News