பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தி நரிக்குறவர்களுக்கு கொடுப்பதா? சாலைமறியல்
பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தி நரிக்குறவர்களுக்கு கொடுப்பதா என கேட்டுபொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் பொது மக்களின் நிலங்களை பிடுங்கி நரிக்குறவர்களுக்கு கொடுக்க நினைக்கும் அரசு என கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் 81 குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இலவச வீட்டு மனை பட்டா கடந்த நவம்பர் 4ம் தேதி வழங்கப்பட்டது,
இந்த நிலையில் இருளர் மக்களுக்கும், நரிக்குறவர் மக்களுக்கும் இருக்க கூடிய பழக்க வழக்கங்கள் மாறுதலாக உள்ள நிலையில் அடிக்கடி இரண்டு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை உருவாகிறது.
நரிக்குறவர் பெண்ணான அஸ்வினி எங்களுக்கு முதல்வர் வழங்கிய பட்டா தேவை இல்லை நாங்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் பட்டாவை திருப்பி ஒப்படைக்கப் போவதாக தகவல் வந்ததை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்து மாற்று இடம் தருவதாக கூறினார்.
அதே பகுதியில் தலித் உள்ளிட்ட பிற சமூகத்தினர் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் அரசு நிலங்களை அவர்களிடம் இருந்து கைப்பற்றி நரிக்குறவர்களுக்கு வழங்குவதாக கூறி அந்த இடங்களை அளவீடு செய்து வந்த நிலையில் அந்த இடத்தில் வசிக்கும் மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்,
இந்த நிலையில் அரசு அதிகாரிகாரிகளும் அவர்களுக்கு எதிராக பேசி வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட சென்ற போது காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது,
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் மணிவண்ணன் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் பேசி உரிய தீர்வு காண்கிறோம் என்று உறுதியளித்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்களது இடங்களை பிடுங்கி நரிக்குறவர் மக்களுக்கு கொடுத்தாள் நாங்கள் எங்களது வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் திருப்பித் தரப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.