வனப்பகுதிகளில் கிடந்த முக கவசங்கள் அகற்றம் : தனியார் அமைப்பினர் அசத்தல்
வனப்பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள உபயோகித்த முகக்கவசங்களை தனியார் அமைப்பினர் அகற்றினர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மடையத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வனப்பகுதிகளில் ஆகியவற்றில் ஏராளமான உபயோகித்த முகக் கவசங்கள் கொட்டப்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயம்பட்டுள்ளது.
மேலும், இந்த காடுகளில் வாழும் வன விலங்குகளுக்கும் இடையூறாக உள்ளது. அதனை அந்த கிராம டிராகன் பாய்ஸ் இளைஞர் என்ற இயக்கம் சார்பில் அக்குழுவின் தலைவர் ரமேஷ் ஊராட்சி செயல் அலுவலர் பரிமளா கோவிந்தசாமி ஆகியோர் இளைஞர்களுடன் இணைந்து காடுகளில் கொட்டப்பட்டுள்ள உபயோகித்து வீசப்பட்டுள்ள முகக்கவசங்களை அகற்றி அப்பகுதிகளை சுத்தம் செய்தனர்.
கிராமத்தில் உள்ள தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இளைஞர்களின் இச்செயலை மடையத்தூர் கிராம பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.