லத்தூர் ஒன்றியம் 7 வது வார்டில் 5 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப் போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வளர்மதி, திமுக சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் கோதண்டன், சுயேட்சை வேட்பாளர்களாக அரிகிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
லத்தூர் 7 வது வார்டில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.