லத்தூர் ஒன்றியம் 6 வது வார்டில் 4 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ரஞ்சன், திமுக சார்பில் சாந்தி, தேமுதிக சார்பில் செல்லப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் லோகேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
லத்தூர் 6 வது வார்டில், திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.