லத்தூர் ஒன்றியம் 5 வது வார்டில் 6 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப் போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் லட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகமல்லி, தேமுதிக சார்பில் மாலதி, சுயேட்சை வேட்பாளர்களாக செல்வி, விமலா, சின்னதங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
லத்தூர் 5 வது வார்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிமுக, தேமுதிக ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.