லத்தூர் ஒன்றியம் 4 வது வார்டில் 7 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 முனைப் போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ஜெய்சங்கர், திமுக சார்பில் சின்னதம்பி, நாம் தமிழர் கட்சி ரஞ்சித்குமார், தேமுதிக சார்பில் வேதாச்சலம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்சார்பில் குமார், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சுப்ரமணி, சுயேட்சை வேட்பாளர் நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
லத்தூர் 4 வது வார்டில், திமுக, அதிமுக, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.