லத்தூர் ஒன்றியம் 3 வது வார்டில் 6 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப் போட்டி நிலவுகிறது.

Update: 2021-10-02 14:45 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன்.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் லோகம்மாள், திமுக சார்பில் ராமச்சந்திரன், பிஜேபி சார்பாக சரண்ராஜ், நாம் தமிழர் கட்சி தங்கராஜ், தேமுதிக சார்பில் லீலாவதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்சார்பில் கோவிந்தராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

லத்தூர் 3 வது வார்டில், திமுக, அதிமுக, பாதிய ஜனதா கட்சி, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி, ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

Similar News