லத்தூர் ஒன்றியம் 2 வது வார்டில் 5 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப் போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பார்வதி, காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகலா, நாம் தமிழர் கட்சி மைதிலி, தேமுதிக சார்பில் கோமதி, சுயேட்சை வேட்பாளராக ஜீவா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
லத்தூர் 2 வது வார்டில், திமுக, அதிமுக, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி, ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.